நிஜமாக இருந்தவர்களாலயே ஒன்றும் செய்ய முடியாத அதிமுகவை நிழல் என்ன செய்ய முடியும் : சிவி சண்முகம் ஆவேசம்!!
Author: Udayachandran RadhaKrishnan17 October 2021, 5:01 pm
எம்.ஜி.ஆரோடு நிஜமாக இருந்தவர்களால் ஒன்னும் செய்ய முடியாத அதிமுக வை நிழலால் (சசிகலா) ஒன்றும் செய்ய முடியாது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
விழுப்புரம் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் நடைப்பெற்ற அதிமுக 50 ஆம் ஆண்டு பொன் விழாவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதனை தொடர்ந்து ஆதரவற்ற சிறுவர் சிறுமிகள் மற்றும் அதிமுக முன்னோடிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், எம்.ஜி.ஆர் எல்லாம் நாங்கள் தான், நாங்கள் தான் அதிமுக, என்று கூறிய பண்ருட்டி ராமசந்திரன், நெடுஞ்செழியன், உள்ளிட்ட பெரிய தலைவர்களை பார்த்த இயக்கம் அதிமுக, அவர்கள் இன்று எங்கு இருக்கிறார்கள் என்று இடம் தெரியாமல் போயிட்டார்கள்.
ஆகவே மீண்டும் சொல்கிறேன், நிஜமாக இருந்தவர்களாலேயே ஒன்றும் செய்ய முடியவில்லை நீங்கள்(சசிகலா) நிழல் உங்களால் அதிமுக வை ஒன்றும் செய்ய முடியாது என்று சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசினார். ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுக வை ஒன்றும் செய்யமுடியாது என்று ஆவேசமாக பேசினார்.
0
0