ஏழைகளின் பசியை போக்கிய அம்மா உணவகத்திற்கு இப்படியொரு நிலையா..? திமுகவினரின் செயலுக்கு ஜெயகுமார் கண்டனம்..!!

4 May 2021, 1:48 pm
jayakumar - updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் அம்மா உணவகத்தை சூரையாடிய திமுகவினரின் செயலுக்கு ஜெயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முகப்பேரு 92வது வார்டு அம்மா உணவகத்தை திமுகவினர் சூரையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக நிர்வாகிகள் சிலர் அம்மா உணவகத்திற்குள் சென்று, அங்கிருந்த பெயர் பலகை உள்ளிட்டவற்றை தூக்கி எரிந்து அட்டகாசம் செய்துள்ளனர். இது அங்கு உணவருந்த வந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை, தொடர்ந்து நிறைவேற்றுவது புதிய அரசின் நடவடிக்கையாக இருக்கும். கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு விநியோகிக்கப்பட்டு வந்தது பெரும் பயனுள்ளதாக இருந்து வந்துள்ளது. இந்த சூழலில், திமுகவினர் இந்த செயல் பொதுமக்களிடையே முகசுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விடுத்துள்ள கண்டன பதிவில், “ஏழை எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் இன்று சில சமூக விரோதிகளால் சேதப் படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது..மழை வெள்ள காலம்,கொரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூரையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 169

0

0

Leave a Reply