எம்ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை : லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

22 July 2021, 4:59 pm
mr vijayabaskar - raid - - updatenews360
Quick Share

சென்னை : முன்னாள் அமைச்சர் எம்ஆர். விஜயபாஸ்கரின் வீட்டில் நடந்த சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை உள்பட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடந்து வருவதால் போலீசாரும் சம்பந்தப்பட்ட இடங்களில் குவிக்கப்பட்டனர்.

அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில், சென்னை மற்றும் கரூரில் 21 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரின், ஆண்டான்கோவில் பகுதியில் உள்ள வீடு மற்றும் அலுவலகம் சோதனை செய்யும் இடத்திற்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள் ஆவணங்களை எடுத்து சரிபார்ப்பதற்காக கட்டைப் பையில் எடுத்து சென்றனர். அப்போது, அதிமுகவினர் அவர்களை தடுத்து நிறுத்தி, “இது என்னவென்று எங்களிடம் காண்பித்து விட்டு செல்லுங்கள் நீங்களாகவே ஏதாவது கொண்டு வைத்துவிட்டு பொய் வழக்குப் போடலாம்,” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Views: - 144

0

0

Leave a Reply