எப்போதெல்லாம் அதிமுக போராட்டம் அறிவிக்கிறதோ… அப்போதெல்லாம் திமுக ரெய்டு ; முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!!

Author: Babu Lakshmanan
13 September 2022, 1:48 pm
Quick Share

அதிமுக எப்போதெல்லாம் போராட்டம் அறிவிக்கின்றார்களோ, அப்பொழுதெல்லாம் திமுக அரசு சோதனையை ஏவி விடுகின்றது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் தளவாய் சுந்தரம் ஆகியோர் சென்னை அடையாரில் உள்ள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை பார்வையிட்டு செய்தியாளர்களை சந்தித்தனர்..

அப்பொழுது செய்தியாளரிடம் பேசிய ஜெயக்குமார் :- விடியாத அரசு தவறாமல் செய்யும் ஒரே வேலை ரெய்டு. குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர்களின் செயலை முடிக்க வேண்டும் என்று செயல்படுகிறது. நாட்டில் பல பிரச்சனை உள்ளது. ஆன்லைன் ரம்மி, கொலை, கொள்ளை, அடிப்படை கட்டமைப்பு பிரச்சனை என்று சிங்கார சென்னையை சீர்கேடான சென்னையாக மாற்றி வருகிறார்கள் என்று சாடினார்..

மடிக்கணினி வழங்கவில்லை, தாலிக்கு தங்கம் திட்டத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விட்டனர். பஸ் கட்டணம், பால் கட்டணம், சொத்து வரி, மின் கட்டணம் என்று பல்வேறு கட்டண உயர்வு பிரச்சனையை பேச விடாமல் திசை திருப்ப இந்த ரெய்டு.

மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டால் மக்கள் பாதிக்கப்படுவார்கள், இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி போராட்டம் அறிவித்தார். எப்பொழுது எல்லாம் அதிமுக போராட்டம் அறிவிக்கின்றார்களோ, அப்பொழுதெல்லாம் திமுக அரசு இப்படி ரைட் விடுகின்றது. சீப் ஒழிச்சு வெச்சா கல்யாணம் நடைபெறாது என்று அவர்கள் எண்ணக்கூடாது, என்று தெரிவித்தார்..

மேலும் இன்றைக்கு எசமான் ஸ்டாலின் தான். அவர் கூறுவது தான் காவல் துறை கேட்டு இப்படி ரைடு விடுகிறார்கள். அதுமட்டுமின்றி அமைச்சர் மூர்த்தி வீட்டு திருமணம் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் வீட்டு திருமணம் போல நடைபெற்றது. எவ்வளவு செல்வம் இவர்கள் வைத்திருப்பார்கள். பெரிய சீமாங்களாக உள்ளனர்கள் இவர்கள், என்றார்.

விஜயபாஸ்கர் மீது போடப்பட்ட வழக்கைப் பொருத்தவரை மத்திய அமைச்சர் தான் இதற்கு சீட்டு வழங்கினார். முன்னாள் அமைச்சர் விஜய்பாஸ்கர் பங்கே இதில் கிடையாது.இதற்கு essential certificate வழங்குவது தான் மாநில அரசின் வேலை. இதற்கு இறுதி கையெழுத்து இந்திய அரசாங்கம் தான் வழங்க வேண்டும். மாநில அமைச்சருக்கு பங்கே இல்லை என்று கூறினார்.

Views: - 337

0

0