“நான் என்னை தனிமைப்படுத்தியுள்ளேன்” முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா.!!

7 May 2021, 7:56 am
Minister Vijayabhaskar - Updatenews360
Quick Share

சென்னை:முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று மக்களிடையே பெறும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாள்தோறும் லட்சக்கணக்கான புதிய நோயாளிகளும், ஆயிரக்கணக்கான மரணங்களும் அதிகரித்து வருகின்றன.

கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களை அனுமதிக்க முடியாமல் மருத்துவமனைகளும், பிணங்களை எரிக்க முடியாமல் சுடுகாடுகளும் திணறி வருகின்றன. கொரோனா 2-வது அலை தீவிரமடைந்ததால் சுகாதாரத்துறையும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறு மாநிலங்களில் படுக்கைவசதி பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது என்று குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “பொது சுகாதார ஆய்வகத்தில் செய்துகொண்ட பரிசோதனையில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என்றும், இதனையடுத்து தான் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாகவும், தனது தொடர்பில் இருந்த அனைவரையும் சோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தயவுசெய்து கோவிட் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இத்தனை நாட்கள் கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பதவியை இழக்கும் கடைசி நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அனைவரிடத்திலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 116

0

0