மரத்தின் மீது கார் மோதி விபத்து: 4 பேர் உயிரிழந்த சோகம்..!!

22 October 2020, 5:23 pm
acc - updatenews360
Quick Share

பழனி அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த 4 பேர் காரில் உடுமலை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது கரடிக்கூட்டம் என்ற பகுதியில் கார் சென்றுகொண்டிருந்த போது காரின் டயர் வெடித்துள்ளது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 20

0

0