1500 மீட்டர் ஓட்டத்தின் போது காலிடறி இளைஞருக்கு எலும்பு முறிவு : காவலர் உடல் தகுதி தேர்வில் பங்கேற்ற போது சோகம்!!

Author: Udayachandran
27 July 2021, 6:18 pm
Physical Exam Injury -Updatenews360
Quick Share

காஞ்சிபுரம் : சீருடை பணியாளருக்கான உடல் தகுதி தேர்வில் கலந்து கொண்ட வாலிபர் ஒருவர் 1500 மீட்டர் ஓட்டத்தில் ஓடியபோது கால் இடறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாடு காவல்துறையில் 2020 ஆம் ஆண்டிற்கான தீயணைப்பு மற்றும் சிறைத் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடற்தகுதி தேர்வு இரண்டாவது நாளாக காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த உடல் தகுதித் தேர்வில் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மொத்தம் 3,028 நபர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

ஏற்கனவே எழுத்துத்தேர்வு முடிவுற்ற நிலையில் நேற்று உடல் தகுதித் தேர்வு தொடங்கியது. நாளொன்றுக்கு 500 இளைஞர்கள் கலந்து கொள்வார். இன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற தேர்வில் 1500 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் கலந்துகொண்ட இளைஞர்களில் திருத்தணி தாலுகாவை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்ற 27 வயது வாலிபர் கலந்து கொண்டு ஓடி வரும் போது கால் இடறி கீழே விழுந்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

படுகாயமடைந்த அவரை காவலர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜெயப்பிரகாஷ் முட்டிக்கு கீழே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால், ஆபரேஷன் செய்து பிளேட் வைக்கும் நிலை ஏற்படும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டது.

Views: - 131

0

0