பாஜக பிரமுகர் என கூறி ரூ.14 கோடி மோசடி : பலே கில்லாடியை கைது செய்ய கோரிக்கை!!

Author: Udayachandran
7 October 2020, 5:48 pm
PM Scheme Fraud - Updatenews360
Quick Share

மதுரை : பாரத பிரதமரின் கடன் உதவித் திட்டத்தில் கடன் வாங்கி தருவதாக கூறி ஆயிரக்கணக்கானோரிடம் 14 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் வந்ததையடுத்து மோசடியில் ஈடுபட்டவரை கைது செய்ய கோரி பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியரிடம் முறையிட்டனர்.

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பாரத மாதா என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் முகி பாலமுருகன் என்பவர் தான் பாரதிய ஜனதா கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளதாக கூறிக்கொண்டு பிரதம மந்திரியின் பெயரில் மத்திய அரசு வழங்கும் கடன் உதவித்திட்டத்தில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் கடன் உதவி பெற்றுத் தருவதாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் 14 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட முகி. பாலமுருகன் என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டோர் மதுரை மாநகர் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

பாரத பிரதமரின் திட்டம் என்பதால் நம்பிக்கையுடன் பணம் செலுத்தியதாகவும் ஆனால் பிரதமரின் பெயரை கூறி மோசடி செய்த முகி பாலமுருகனை கைது செய்வதுடன் மோசடி செய்த பணத்தை மீட்டுத்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Views: - 48

0

0