FREE FIRE விளையாட்டால் விபரீதம்.. சிறுமி மாயமான வழக்கு போக்சோவாக மாற்றம்.. போலீசாருக்கு காத்திருந்த டுவிஸ்ட்..!!

Author: Babu Lakshmanan
12 July 2022, 3:43 pm
Quick Share

மதுரையைச் சேர்ந்த சிறுமியை பிரீ பையர் கேம் மூலம் பழகி மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அழைத்துச் சென்ற வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம் T.புடையூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. இவர் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்கோட் மாவட்டம் புதிய ரயில்வே காலனி பகுதிக்கு சென்று, அங்கு வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கு ஒரு பெண்ணை திருமணம் முடித்து இவர்களுக்கு செல்வா என்கின்ற 22 வயதில் மகன் உள்ளார்.

கடந்த 2021ஆம் ஆண்டு பிரீ பையர் கேம் மூலம் மதுரை பசுமலை பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் செல்வா பழகியுள்ளார். அதன் பின் காலப்போக்கில் செல்வாக்கும், 16 வயது சிறுமிக்கு காதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, 20.12.2021 ஆம் ஆண்டு அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தையை கூறி மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு சிறுமியை வரவைத்து, அங்கிருந்து தான் வசிக்கும் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு செல்வா அழைத்துச் சென்றுள்ளார்.

வீட்டில் இருந்த மகள் காணாமல் போனதாக சிறுமியின் பெற்றோர்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புகார் அளித்தனர். சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடினர். மேலும், சிறுமியின் செல்போன் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடுத்தனர். இதை அறிந்த செல்வா போலீசார் வருவதை அறிந்து தப்பி ஓடிய நிலையில், சிறுமியை கடந்த 04.04.2022 அன்று புனேவிலிருந்து சிறுமியை மீட்டனர்.

மதுரைக்கு அழைத்து வந்த சிறுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிறுமி நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். தொடர்ந்து, தலைமறைவாகிய செல்வாவை போலீசார் தேடி வந்தனர். சிறுமி காணாமல் போனதாக பதியப்பட்ட வழக்கு, போக்சோ வழக்காக மாற்றப்பட்டு சிறுமியை அழைத்துச்சென்ற செல்வாவை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக திருப்பரங்குன்றம் போலீசார் செல்வாவை தேடி வந்த நிலையில் தற்போது அவர் பயன்படுத்திய செல்போன் எண்ணை சோதனை செய்ததில் மகாராஷ்டிரா மாநிலம் ராஜ்கோட் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் புதிய ரயில்வே காலனியில் இருப்பதாக தெரிந்தது.

உடனடியாக திருப்பரங்குன்றம் காவல் ஆய்வாளர் சுந்தரி தலைமையில் 5 பேர் கொண்ட போலீசார் மகாராஷ்டிரா மாநிலம் சென்று சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற செல்வாவை நேற்று கைது செய்து மதுரை அழைத்து வந்து போலீசார் செல்வாவை இன்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஃப்ரீ பையர் கேம் மூலம் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறி மதுரையிலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற விவகாரத்தில், ஏழு மாதம் கழித்து திருப்பரங்குன்றம் போலீசார் அவரை மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 590

0

0