கோவையில் 140 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா : அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார்!!

4 October 2020, 7:49 pm
Cbe SP vElumani- Updatenews360
Quick Share

கோவை : வேடப்பட்டி அருகே 140 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார்.

கோவை வேடப்பட்டி பேரூராட்சி நம்பி அழகன் பாளையம் பகுதியில் அம்மா சமுதாய நலக்கூடம் திறந்து வைத்தும், அதே பகுதியில் நாகராஜபுரம் 140 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி, இந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக பட்டா கேட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்களுக்கு இன்று பட்டா வழங்கப்படுகிறது இதனால் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

இந்த நிலத்தின் மொத்த மதிப்பு 2 கோடி ஆகும். கோவை மாவட்டம் முழுவதும் விடுபட்ட பட்டாக்களை கொடுத்து வருகிறோம். இந்த பட்டா கவர் முதற்கொண்டு இலவசமாக வாங்கி தருகிறோம். இதில் எந்தவித இடைத்தரகர் யாரும் இல்லை யாரும் அவர்களை நம்பி விட வேண்டாம் என்றார்.

மேலும் கொரோனா நோய் தொற்று காரணமாக நோய் தொற்று பெட்டகம் கொடுத்து உள்ளோம். இதை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு வரும் என்றும் 12 லட்சம் குடும்பங்களுக்கு இதுவரை கொடுத்துள்ளோம், பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொடுத்து வருகிறோம் என்றார்.

கோவையில் 50 ஆண்டு கால வளர்ச்சியை கொடுத்து உள்ளோம் அதே போல கோவையில் மாவட்டத்தில் 5 அரசு கல்லூரி இருக்கிறது இதில் 2000 ரூபாய் கட்டணத்தில் மாணவர்கள் படித்து வருகிறார்கள் இதில் மகளிர் தனி கல்லூரி அமைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

பொதுமக்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தும் செய்து வருகிறோம் கோவை மாவட்டம் முழுவதும் சமுதாய நலக்கூடம் சாலை விரிவாக்கப் பணிகள் வடிகால் அமைக்கும் பணி மேல்நிலைத் தொட்டி அனைத்தும் செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.