சுதந்திர தினத்தில் சுதந்திரமாக நடந்த மது விற்பனை : குடிக்கு அடிமையான குடிமகன்கள்.. வெளியான பரபரப்பு காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2021, 5:45 pm
Alcohol Sales - Updatenews360
Quick Share

திண்டுக்கல் : சுதந்திர தினத்தில் மது விற்பனை ஜோராக நடைபெற்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் விசாகன் அரசு மதுக்கடைகளை மூடவும் மேலும் விதிமுறையை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியும் வடமதுரை பகுதிகளில் மதுபான விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து வடமதுரை மதுபானக் கடையின் அருகே மது விற்பனை நடைபெற்று கொண்டிருந்தது. அதில் மது வாங்க வந்த நபர் ஒருவர் 140ரூபாய் மதிப்புள்ள குவாட்டரை 200ரூபாய்க்கு விற்பனை செய்கிறார் என்று தகாத வார்த்தைகளால் திட்டினர்.

சுதந்திர தினத்தில் கூட மதுபான விற்பனையை நிறுத்தாமல் திமுக ஆட்சியில் மது விற்பனை செய்தது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

உடனடியாக மாவட்ட ஆட்சியரும் மாவட்ட கண்காணிப்பாளரும் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்

Views: - 357

0

0