கோவையில் 447 பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் : 180 பேருந்துகளில் அனுமதி இல்லை!!

8 May 2021, 10:45 am
Bus Ladies Free - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் சாதாரண கட்டணம் உள்ள 447 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் சாதாரண கட்டணமுடைய நகரப் பேருந்துகளில் மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்கள் உட்பட அனைத்து மகளிருக்கும் கட்டணம் வசூலிப்படமாட்டாது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். மேலும் இதனால் அரசு போக்குவரத்து கழகத்துக்கு ஏற்படும் இழப்பை மானியமாக கொடுப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இன்று காலை முதலே கோவையில் பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். கோவை மாவட்டம் முழுவதும் 627 நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன இதில் 369 பேருந்துகள் சாதாரண கட்டணம் உடைய பேருந்துகள்.

பேருந்துகளில் பயணிக்க மகளிருக்கு இலவசம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து கூடுதலாக 78 சாதாரண கட்டணம் உள்ள பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. மொத்தமாக கோவை மாவட்டத்தில் 447 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 180 பேருந்துகளில் இலவச அனுமதி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 189

0

0