“நட்ப விட புரோட்டா தா முக்கியம்“ : இலையில் கை வைத்த நண்பன் அடித்துக் கொலை!!!

2 March 2021, 1:19 pm
Parotta murder -Updatenews360
Quick Share

கோவை : கோவையில் புரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் இலையில் கை வைத்த நண்பர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை இடையர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 25). நேற்று இரவு தனது நண்பர்களான கிருஷ்ணகுமார் மற்றும் சுரேஷ் ஆகியோருடன் மது அருந்திவிட்டு அதே பகுதியில் உள்ள வெள்ளியங்கிரி என்பவரது வீட்டிற்கு சென்றார்.

அப்போது வெள்ளியங்கிரி புரோட்டா சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஜெயக்குமார் வெள்ளியங்கிரியின் புரோட்டாவில் கை வைத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த வெள்ளியங்கிரி, ஜெயக்குமாரை திட்டிவிட இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

தொடர்ந்து ஜெயக்குமார் அருகில் இருந்த செங்கல்லை எடுத்து வெள்ளியங்கிரியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெள்ளியங்கிரி உருட்டு கட்டையை எடுத்து ஜெயக்குமாரை தலையில் சரமாரியாக தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தடாகம் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், ஜெயக்குமாரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் வெள்ளியங்கிரியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Views: - 36

0

0