சிட்டுக்குருவிகளின் நண்பன் : புத்துணர்வு தரும் புல்லினங்கால்! ஓர் நெகிழ்ச்சி சம்பவம்!

Author: Udayachandran
13 October 2020, 10:54 am
Ooty Sparrow - Updatenews360
Quick Share

நீலகிரி : உதகை தினசரி சந்தையில் நாள்தோறும் தனது கடையில் உள்ள சிட்டுக்குருவிகளுக்கு தவறாமல் உணவளித்து வரும் வியாபாரி சிட்டுக்குருவிகளின் நண்பனாய் இருந்து வருகிறார்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சி தினசரி சந்தையில் கூடை, பாய் ,வியாபாரம் செய்து வரும் கோவிந்தராஜ் அவரது கடையில் சுமார் 10 க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளை தொங்கவிட்டு சிட்டுக்குருவிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார்.

அதிகாலை தனது கடையை திறந்தவுடன் குருவிகள் சப்தமிடுதை கண்டு மற்றவர்களும் ஆச்சரியத்துடன் ரசித்து வருகின்றனர். கடை திறந்தவுடன் சிட்டுக்குருவிகளுக்காக பிஸ்கட் வழங்கும் கோவிந்தராஜ், அதை உன்ன கூண்டுகளில் உள்ள சிட்டுக்குருவிகள் ஒன்றன்பின் ஒன்றாக தனது அலகால் பிஸ்கட்டை கொத்தி கூண்டில் உள்ள குஞ்சுகளுக்கும் கொடுத்து வருகிறது.

இதைப்பற்றி கடை உரிமையாளர் கோவிந்தராஜ் கூறுகையில் ஆரம்பத்திலிருந்தே சிட்டுக்குருவிகளுக்கு உணவு அளித்து வருவதாகவும், முன்பைவிட சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை தற்போது குறைவாக உள்ள நிலையில் தன் கடையில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகளை அன்பாய் பாவித்து அவைகளுக்கான உணவை நாள் தோறும் வழங்கி வருவது மனதிற்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அதே சமயம் அதிகாலை வேளை என்பதால் சிட்டுக் குருவிகளின் சப்தத்தை கேட்கும்போது புத்துணர்வு ஏற்படுகிறது என கூறினார்.

Views: - 49

0

0