நண்பர் விவேக் மறைவு வேதனை அளிக்கிறது : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

17 April 2021, 9:49 am
Rajini Vivek -Updatenews360
Quick Share

சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய நண்பர் விவேக் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார். தமிழ் திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த அவர், சின்னக் கலைவாணர், ஜனங்களின் கலைஞன் என அழைக்கப்படுகிறார்.

அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பிட்டனர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகர் விவேக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய நண்பர் விவேக் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது, ‘சிவாஜி‘ படப்பிடிப்பில் நடிகர் விவேக்குடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள், அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

Views: - 40

0

0