திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நேற்று திருச்சியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் சுற்றுலா வந்துள்ளனர்.
இங்குள்ள சின்னபள்ளதில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இரண்டு அறை எடுத்து தங்கி உள்ளனர். மேலும் கொடைக்கானலில் உள்ள மதுபான கடையில் மதுபானம், பார்பி Q செய்ய சிக்கன் மற்றும் மசாலா பொருட்கள், மேலும் அதனை தயார் செய்ய அடுப்பு கரி, மற்றும் அடுப்பு ஆகியவற்றை தயார் செய்து தங்கும் அறைக்கு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் நேற்று நண்பகல் முதல் இரவு வரை விடாமல் மழை பெய்து வந்த நிலையில் கடும் குளிர் நிலவி வந்தது.
இதனையடுத்து இந்த நான்கு இளைஞர்களும் நேற்று இரவு மது அருந்தி விட்டு, அடுப்பு கரியை கொண்டு தங்கும் அறையிலேயே பார்பி சிக்கன் சமைத்துள்ளனர்.
பிறகு ஆனந்த பாபு, ஜெயகண்ணன் ஆகிய இருவரும் ஒரு அறையிலும் சிவசங்கர், சிவராஜ் ( சகோதரர்) ஆகிய இருவர் வேறு ஒரு அறையிலும் உறங்கியுள்ளனர்.
இதில் இரவு பார்பி சிக்கன் சமயல் முடித்து விட்டு அந்த அடுப்பினை அணைக்காமல் தங்களது அறையியே குளிருக்காக அப்படியே விட்டு விட்டு உறங்கி உள்ளனர்.
அதனை தொடர்ந்து இன்று காலை அவர்களை எழுப்ப சென்ற போது அவர்கள் மூச்சு பேச்சு இல்லாம இருந்துள்ளனர்.
அதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்து அவர்களை சோதித்த போது அந்த இருவரும் உயிர் இழந்ததாக தெரிந்தது.
அதனை தொடர்ந்து கொடைக்கானல் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்த போது நேற்று இரவு அடுப்பு கரி அமைக்காமல் அறையிலேயே வைக் கபட்டிருந்ததால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து இறந்து போன அந்த இருவர்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே இது போல அடுப்பு கரி புகை காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்த மூன்று சம்பவங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து கொடைக்கானல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.