தஞ்சையில் அச்சத்தை தரும் கொரோனா : மேலும் 5 மாணவர்களுக்கு தொற்று உறுதி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2021, 9:14 am
Tanjore Corona-Updatenews360
Quick Share

தஞ்சாவூர் : கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தஞ்சையில் மேலும் 5 மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாடகளாக கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. முக்கியமாக பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் தஞ்சையில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளில் உள்ள மாணவ மாணவிகள், ஆசிரியர்களுக்கு முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை பரிசோதனை முகாமில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதுவரை தஞ்சையில் மட்டும் 180 பள்ளி மாணவர்கள் மற்றும் 13 கல்லூரி மாணவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மாணவர்கள் இடையே கொரோனா பரவி வருவது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 75

0

0