Categories: தமிழகம்

இனி எம்ஜிஆர், ஜெ.,வை தொடர்ந்து இபிஎஸ் போட்டோவும் தொண்டர்கள் சட்டையில் இருக்கும் : முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமிதம்!!

100 ஆண்டுகளை கடந்து கட்சி செயல்பட காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்ற கொடுவருவதில் தவறில்லை என முன்னாள அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

ஜூலை 11ல் நடைபெற்ற பொதுக் குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கியது இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர் அதிமுக கட்சி அலுவலகத்தில் கட்சித்
தொண்டர்களை சந்தித்து இனிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாடிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசும்பொழுது, அதிமுக வெற்றிச் சரித்திரத்தல் மற்றுமொறு மகுடமாக சிறப்பான தீர்ப்பை நீதிபதி வழங்கி இருக்கிறார். உயர்நீதிமன்றத் தீர்ப்பால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் இருந்த குழப்பம் நீங்கி உள்ளது.

கழகத்தின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அம்மாவிடம் அரசியல் கற்றவர் கட்சித் தொண்டகளை அரவணைப்பில், கட்சியை வளர்ப்பதில் முன்னோடியாக திகழ்கிறார். இந்த வெற்றி எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த வெற்றியாக தெரிக்கிறது.

கேரளா செல்லும் தமிழக முதல்வர் விளம்பரத்திற்கு செல்லாமல் 5 மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்னைக்கு, முல்லைப் பெரியாறு ஆக்கப் பூர்வமாக தீர்வு காண வேண்டுமென மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

திமுகவிற்கு ஓர் ராசி உண்டு. ஆட்சிக்கு வந்தால் அணைப் பிரச்னை வரும், அதில் கவனம் செலுத்துவது கிடையாது என்ற கருத்தை முதல்வர் மாற்றிக் காட்ட வேண்டும. முதல்வரின் பயணம் வெற்றிப்பயணமாக அமைய வாழ்த்துகிறேன்.

கேரள முதல்வர் பினராய் விஜயன் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிக்கு மேல் நீர் தேக்க நடவடிக்கைகள் செய்து அதை 5 மாவட்ட மக்களுக்கு ஓணம் பரிசாக தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இடைக்காலப் பொதுச் செயலாளர் சிறந்த மாணவர் அவருக்கு கட்சியை எப்படி வழிநடத்த வேண்டுமென ஜெயலலிதாவிடம் பாடம் கற்றவர். திமுக அதிமுகவிற்கு எப்படி நல்ல கருத்தை சொல்வார்களா?? முரசொலி நாளேடும் அதேத்தான் செய்யும் முன்பே எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை தரம்தாழ்த்தி விமர்சனம் செய்தவர்கள். அதை நம்புபவன் அடிமுட்டாளாகத்தான் இருப்பான்.

எங்களின் இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அடுத்த முதல்வர். தொடந்து அதிமுக குறித்த கேள்விகளால் சற்று எரிச்சல் அடைந்த செல்லூர் ராஜூ
எப்போதும் அரச்ச மாவையே அரைக்காதீர்கள்!! அது அதிமுகவின் உட்கட்சி பிரச்னை மக்கள் பிரச்னையை பேசுவோம்ப்பா.. என்றார்.

திமுக நகைக்கடன் தள்ளுபடி செய்வேன் என சொன்னார்கள் செய்யவில்லை, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமைத் தொகையும் வழங்கவில்லை பலத்திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை.

பல்லி சொன்ன மாதிரி “சுசு சுசு” என சொல்லிக் கொண்டே இருக்கிறேன். நிதி அமைச்சர் தன் செல்வாக்கை பயன்படுத்தி மதுரை மக்களுக்கு நிதியைப் பெற்று திட்டங்களை செயல்படுத்தட்டும் மதுரை மக்கள் மீது பாராமுக காட்டுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

மழைக்கு முன் சாலைகளை சீர் செய்யுங்கள் என நான் சேவல் கூவுவது போல கூவு இருக்கேன்… பயனில்லை தற்போது மழையால் மக்கள் சாலையில் பயனிக்க முடியாமல் அவதியடைகின்றனர்.

10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் பணியாற்றிவிட்டு அரசு அதிகாரிகளுக்கு வேலை செய்வது மறந்துவிட்டார்கள் பயிற்சி கொடுக்க வேண்டுமென்ற நீர்வளத்துறை துரைமுருகன் கருத்திற்கு

இந்த ஆண்டின் சிறந்த ஜோக் அமைச்சர் துரைமுருகன் சொல்வதுதான். அவர் சட்டமன்றத்தில் மூத்தவர் எப்போது நகைச்சுவையாக பேசக் கூடியவர் அப்படித்தான் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்.

எட்டுவழிச் சாலையில் திமுக நிலைப்பாடு குறித்தக் கேள்விக்கு? எதிர்க் கட்சியாக இருந்தால் ஓர் நிலைப்பாடு ஆளும் கட்சியாக இருந்தால் ஓர் நிலைப்பாடு திமுக எடுத்து வருகிறது, அப்போது போரட்ட நடத்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன் இப்போது அகதிகளாக எங்கும் சென்றுவிட்டார்களா அல்ல வாய்முடி மவுனியாக மாறிவிட்டார்களா??

சட்டமன்றத்தில் ஸ்டாலின் எதிர்கட்சித் தலைவராக இருந்த போது வெட்கம் இருக்கா, மானம் இருக்கா, ரோசம் இருக்கா என ரமணா பட விஜய்காந்த் மாதிரி புள்ளிவிவரத்துடன் அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகளை கூறினார். கமிசனுக்காக செய்கிறாரா என முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி கேட்டார். அதை பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு மறந்துவிட்டார் என நினைக்கிறேன்.

ஆளும் கட்சி எங்களை பற்றி பேசத்தான் செய்வார்கள் பேசவில்லை என்றால்தான் சங்கடப் படவேண்டும். திமுக வேறு, அதிமுகவை மற்றக் கட்சிகளுடன் ஒப்பிடக்கூடாது. எம்.ஜி.ஆர் என்ற நடிகரால் துவங்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்கு பின் 4 ஆண்டுகள் விவசாயி எடப்பாடி பழனிசாமியால் சிறப்பான ஆட்சி கொடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஓர் தொண்டனாக நீங்கள் ஏற்பீர்களா?? 100 ஆண்டுகள் கட்சி இருக்க வேண்டுமானால் காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றம் செய்வதில் தவறில்லை. நாங்கள் திமுகவை போல் வாரிசு அரசியல் செய்யவில்ஜெயலலிதா படமுவில் சாதாரண தொண்டன் தலைவனாக முடியும் திமுகவில் ஆதிதிராவிட தலைமை ஏற்க முடிமா?? தனபால் இருமுறை சபாநாயகராக பணியாற்றினார்.

கட்சியை காப்பாற்ற வழிநடத்த நல்ல கேப்டன் வேண்டும், அப்படி இருந்தால்த்தான் கட்சியை கொண்டு செல்ல முடியும் அப்படிப்பட்டவரை கேட்பனாக்கி உள்ளோம். இனி வரும் காலங்களில் அதிமுக கட்சித் தொண்டரின் சட்டைப் பையில் எம்.ஜி.ஆர் படம், ஜெயலலிதா படம், எடப்பாடி பழனிசாமி படமும் இருக்கும் என்றார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

10 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

11 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

12 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

12 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

13 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

13 hours ago

This website uses cookies.