நோட்டீஸ் அனுப்பியதால் விரக்தி.. மின்சார டவர் மீது ஏறி தேயிலை தோட்ட தொழிலாளி தற்கொலை மிரட்டல்!
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அமைந்துள்ள பாரீ ஆக்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் வீரமணி வயது 57 இவரது மனைவி ராணி.
நேற்று இவர் பணியின் போது அனைத்து தேயிலை நிறுவனமும் காலை பத்தரை மணி அளவில் தேநீர் வழங்குவது தொன்று தொட்டு உள்ள வழக்கம்.
நேற்று அவருக்கு தேநீர் வழங்கிய நிர்வாகத்திற்கு கைக்கூலியாக இருக்கும் தன்ராஜ் வயது 62 இவர் அதே பகுதியில் நிரந்தரப் பணியாளராக பணி செய்து ஓய்வு பெற்றவர்.
இவரை நிர்வாகம் மீண்டும் பணிக்கு அமர்த்தி தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு தேநீர் வழங்க நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நேற்று இவர் மதியம் ஒரு மணி அளவில் தேநீர் வழங்கியதால் வீரமணி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்ட காரணத்தினால் தன்ராஜ் நிர்வாகத்தில் அவரை தவறுதலாக கூறியதன் பேரில் இன்று காலை அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இரண்டு நடவடிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டதாலும் நிர்வாகம் பல முறைஅவரை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படடதால் மன அழுத்தம்காரணமாக அவர் தேயிலை ஆலை அருகாமையில் உள்ள “high power” உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனை அறிந்த வால்பாறை காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் அவரை இறங்கச் சொல்லி வலியுறுத்தியும் இறங்க மறுத்து டவர் மீது ஒரு மணி நேரம் உட்கார்ந்துள்ளார்.
மேலும் படிக்க: பாலியல் குற்றவாளிக்காக ஓட்டு கேட்ட MODI, AMIT SHAH.. பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் வலியுறுத்தல்!
உடனடியாக சம்பந்தப்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர் நலவாரிய ஆணையாளரை வரவேண்டும் அப்போதுதான் கீழே இறங்குவேன் என்று கூறி தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்பகுதியில் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை எவ்வளவு அறிவுறுத்தியும் அதைஏற்க மறுத்து மேலே யாரும் ஏறி வந்தால் மின்னழுத்த கம்பியை தொட்டு விடுவேன் என மிரட்டி உள்ளார். இதனால் அதிகாரிகள் என்ன செய்வது என்று திகைத்தனர். மனைவி கண் எதிரில் மின்கோபுரம் மீது நின்று இருப்பதைப் பார்த்த மனைவி அழுத காட்சி காண்போரை கண்கலங்க வைத்தது
உடனடியாக தொழிலாளர் நல ஆணையாளர் பேச்சு வார்த்தைக்கு வந்த பின்னர் அவர் கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார் அதன் பின்னர் அவரை தீயணைப்பு வாகனத்தில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது/ இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.