எரிபொருள் விலை உயர்வு : கோவையில் சிலிண்டருடன் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்

23 February 2021, 6:39 pm
Cylinder Protest- Updatenews360
Quick Share

கோவை : எரிபொருட்கள் தொடர்ந்து விலை அதிகரித்து வருவதை கண்டித்து தமுமுக தொழிலாளர் அமைப்பினர் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு சிலிண்டருக்கு பாடை கட்டி, ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக லாரிகளுக்கான வாடகை தொகையும் அதிகரித்து அதன் மூலம் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது.

எரிபொருள் விலையை கட்டுப்படுத்தக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு தமுமுக.,வின் தொழிலாளர் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில், சிலிண்டருக்கு பாடை கட்டியும், ஒப்பாரி வைத்தும் தங்களது கண்டணங்களை தெரிவித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 20 பேர் கலந்து கொண்டனர்.

Views: - 0

0

0