கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை: சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார் மேயர் கல்பனா..!!

Author: Rajesh
9 March 2022, 12:05 pm
Quick Share

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனையை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி சார்பில் மாநகரில் உள்ளா 100 வார்டுகளில் பணி செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் உள்ள முழு உடல் பரிசோதனை மையத்தில் நூற்றுக்கு மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் இன்று காலை பரிசோதனை முகாமை துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் துணை மேயர் வெற்றிச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக், 83வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுமா விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்

Views: - 753

0

0