கொரோனா நெருக்கடியை சமாளிக்க தமிழகத்துக்கு 335.41 கோடி நிதி : மத்திய அரசு அறிவிப்பு..!
11 September 2020, 10:55 amமாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று கொரோனா பேரிடரை சமாளிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு படையெடுத்த கொரோனா வைரஸ் தொற்றால் பணக்கார நாடுகளே பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
பொதுமக்களின் வாழ்வாதரம், அன்றாட தேவை, வேலை உள்ளிட்ட அனைத்தும் ஸ்தம்பித்துள்ளது. ஏராளமானோர் உணவுக்கு கூட திண்டாடும் நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் மக்களின் அவலத்தை போக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், வேலை இன்றி வீடுகளில் முடங்கி கிடக்கும் பொதுக்கள் உள்ளிட்ட பலருக்கும் ரேஷன் கடைகள் வாயிலாக உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாநில அரசுகள், மத்திய அரசிடம் நிதி வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வந்தனர்.
இந்த சூழலில், கொரோனா நெருக்கடியை சமாளிக்கும் விதமாக மத்திய நிதி அமைச்சகம் தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூபாய் 6195.09 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் தமிழகத்துக்கு மட்டும் 335.41 கோடி ரூபாயை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.
0
0