மறைந்த முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரத்தின் இறுதி ஊர்வலம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு..!!

19 April 2021, 3:25 pm
papa sundaram - updatenews360
Quick Share

கரூர்: உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பாப்பா சுந்தரம் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. இதில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.

முன்னாள் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான பாப்பா சுந்தரம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை உயிரிழந்தார்.

papa sundaram

வீட்டில் கீழே வழுக்கி விழுந்து அடிப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாப்பாசுந்தரம், குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1989, 1991 , 2001 மற்றும் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் வெற்றி பெற்று, 4 முறை தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதோடு, 2002 – ம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அதேபோல், 2011 – ம் ஆண்டு நான்காவது முறையாக குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அ.தி.மு.க கட்சியில் 1972 – ம் ஆண்டு முதல், கட்சி உறுப்பினராக இணைத்துக் கொண்ட பாப்பாசுந்தரம், கரூர் மாவட்டத்தில் 2000 ஆண்டு முதல் 2003 – ம் ஆண்டு வரை கரூர் மாவட்ட செயலாளராகவும், மாவட்ட அவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

தற்போது, கட்சியின் அமைப்பு செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில்தான், வீட்டில் வழுக்கி விழுந்த அவர், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனிக்காமல் காலமானார். இன்று குளித்தலை அருகே உள்ள வலையப்பட்டியில் உள்ள அவரது வீட்டிலிருந்து இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.

Views: - 73

0

0