தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற்று வருகிறது.
இதேபோல் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை எஸ்.ஆர்.டி கார்னரிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைப்பது வழக்கம்.
அதேபோல் இன்று சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்வதற்காக சத்தியமங்கலம் நகர் பகுதி மற்றும் கிராம பகுதியில் உள்ள இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் டிராக்டர் பிக்கப் உள்ளிட்ட வாகனங்களில் எடுத்து வந்தனர்.
அப்போது கடந்த ஆண்டு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக அதிக ஒலி எழுப்பும் ஸ்பீக்கர்கள் மற்றும் அதிக ஒளி கொண்ட லைட்டுகளை அகற்றுமாறு காவல்துறையினர் சிலையை எடுத்து வந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தியதால் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் சற்று பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதோடு அப்பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.