புதையல் வதந்தியால் விநாயகர் சிலை சேதம்…!! மர்ம நபருக்கு போலீஸ் வலை..!!

19 August 2020, 8:33 am
Quick Share

கோவை: விநாயகர் சதுர்த்தி விழா தற்போது நடைபெற உள்ள நிலையில் சூலூர் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டதால் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு மர்ம நபர்கள் குறித்து விசாரணையை சூலூர் காவல் நிலைய போலீசார் தீவிரப்படுத்தினர். இதனை அறிந்து வந்த இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதனை தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் மீண்டும் அதே இடத்தில் வேறு விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்ய வலியுறுத்தி சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சமாதானத்தை ஏற்றுக் கொண்ட இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் தங்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு தற்காலிகமாக கலைந்து சென்றுள்ளனர்.

மேலும் விசாரணையில் விநாயகர் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் புதையல் இருப்பதாக வதந்தியை தொடர்ந்து இதுபோன்ற செயல்கள் மர்ம நபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழா தற்போது நடைபெற உள்ள நிலையில் இது போன்று விநாயகர் சிலைகளை உடைத்த மர்ம நபர்களை உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்து இதுபோன்ற தவறுகள் நடைபெறா வண்ணம் பாதுகாக்க வேண்டும் என்ற இந்து அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Views: - 25

0

0

1 thought on “புதையல் வதந்தியால் விநாயகர் சிலை சேதம்…!! மர்ம நபருக்கு போலீஸ் வலை..!!

Comments are closed.