Grindr செயலியால் வந்த வினை.. இளைஞர்களுக்கு கூரியரில் வந்த பார்சல் : அதிர வைத்த சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2024, 7:56 pm

திருச்சியில் சட்டவிரோதமாக போதை மருந்துகள் வைத்திருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதவி எண்ணிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில், தொட்டியம் மற்றும் துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவந்தனர்.

Drugs sales

இந்நிலையில் அவர்கள் கொள்ளிடம் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தனிப்படையினர் விரைந்து சென்று அங்கிருந்த மணிகண்டன் 23, சிஜு 33, பாலசுப்பிரமணியன் 38, பிரவீன்குமார் 42, வினோத்குமார் 28, ராமசாமி 42, பார்த்திபராஜ் 31, சுபீர் அஹமத் 37 ஆகியோரை கைது செய்து கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படியுங்க: விஜய்க்கு ஆதரவாக பேசியதால் அமலாக்கத்துறை ரெய்டு.. இது என்னடா புது டுவிஸ்டா இருக்கே!

மேலும் அவர்களிடமிருந்து மெத்தபெட்டமின் 21 கிராம், ஊசி 10, 16 கிராம் கோல்ட் செயின், உபயோகத்தில் உள்ள மொபைல்கள் 2, உபயோகத்தில் இல்லாத மொபைல்கள் 3, மொபைல் டிஸ்ப்ளே 1, கேமரா 1, இரண்டு மணி பர்ஸ் , ஜியோ மோடம், சோடியம் குளோரைடு, பணம் ரூ.5145, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் Grindr எனும் சமூக வலைத்தள செயலியில் பழக்கமாகி, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதற்காக, மேற்படி போதை மருந்துகளை உபயோகித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Drugs Seized

மேலும் அவர்கள் Grindr சமூக வலைத்தள செயலியில் உள்ள நபர்களுக்கு, போதை மருந்துகளை DTDC Courier மூலமாக விற்பனை செய்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது. சம்மந்தப்பட்ட, DTDC Courier நிறுவனத்திற்கு இது தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 483

    0

    0