கோவை : மூதாட்டியை குறிவைத்து பிளாஸ்திரி சுற்றி கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த ம் கும்பலை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் கைது செய்தனர்.
சூலூரில் மூதாட்டியை பிளாஸ்டிரியால் சுற்றி நகையை கொள்ளையடித்த சம்பவத்தில் பவாரியா கொள்ளையர்களை போன்று நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்த இளம் திருடர்களை காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஒரே வாரத்தில் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சரோஜினி என்ற 82 வயது மூதாட்டியை கடந்த ஒரு வாரத்திற்கு முன் நான்கு பவுன் நகை கொள்ளை அடிப்பதற்காக வாய், கை, கால்களில் பிளாஸ்திரி சுற்றி மர்மநபர்கள் கொன்று கொள்ளையடித்து சென்றனர்.
இதில் மூதாட்டி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் சூலூர் காவல்துறையிடம் தெரிவித்து நிலையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.
மூதாட்டியின் வீட்டுக்கு அருகே உள்ள சிசிடிவி ஒன்றில் இளைஞர்கள் நடந்து சென்றது காவல்துறைக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் தொடர்ந்து 200 சிசிடிவிகளை ஆய்வு செய்த காவல்துறையினர் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இளைஞர்கள் என்பதும் அவர்கள் பெங்களூருக்கு தப்பி சென்று இருப்பதும் தெரியவந்தது.
உடனடியாக பெங்களூர் விரைந்த காவல்துறையினர் அங்கே பதுங்கி இருந்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்த அபினேஷ், வசந்த் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது சிறுவனை இவர்கள் இருவரும் கொடுத்த தகவலின் அடிப்படையில் நாகர்கோவிலில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து மூவரிடம் விசாரணை நடத்தியதில் மூதாட்டியை நகைக்காக வாய் கை கால்களில் பிளாஸ்திரியை சுற்றி கொலை செய்து கொள்ளையடித்து சென்றதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
பின்னர் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களிலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளார்களா என அந்த மாவட்ட காவல்துறையினரும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூதாட்டியை கொலை செய்து விட்டு சென்ற இளைஞர்களை ஒரே வாரத்தில் சிசிடிவி உதவியால் கைது செய்திருப்பதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.