பெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் தராமல் தப்பிய கும்பல் : விரட்டி துரத்திய ஊழியரின் பைக்கை பறித்து துணிச்சல்.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!!

Author: kavin kumar
18 January 2022, 1:29 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் தராமல் தப்பிச் சென்றவர்களை விரட்டி சென்ற பங்க் ஊழியரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவத்தின சிசிடிவி காட்சிகளை வெளியீட்டு போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

புதுச்சேரி வில்லியனூர் சுல்தான்பேட்டையில் கூட்டுறவு துறையின் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. அங்கு சண்முகாபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் (31) என்பவர் ஊழியராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இந்த பெட்ரோல் பங்குக்கு 2 இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். அவர்கள் தங்கள் வாகனத்திர்கு பெட்ரோல் நிரப்புமாறு ராஜ்குமாரிடம் கூறினர். ராஜ்குமாரும் 2 வாகனத்திற்கும் பெட்ரோல் நிரப்பி உள்ளார். அப்போது திடீரென அவர்கள் பணம் தராமல் அங்கிருந்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் பணம் தராமல் சென்றவர்களை தனது இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றுள்ளார்.

வில்லியனூர் நோக்கி 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் ராஜ்குமாரை தாக்கிவிட்டு அவரது இருசக்கர வாகனத்தையும் பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து ராஜ்குமார் வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Views: - 382

0

0