சென்னை : தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் புகைப்படத்துடன் உலா வந்த மர்மநபர்கள் கையில் பட்டாகத்தியுடன் பொதுமக்களை விரட்டும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவில் தெருவில் உள்ளவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார்.
இவர் வீட்டின் அருகே இரவு நின்று கொண்டிருந்த போது, ஹெல்மெட் அணிந்த 6 இருசக்கர வாகனங்களில் வந்த 12 பேர் கொண்ட மர்மகும்பல், ஒரு புகைப்படத்தை காட்டி இந்த நபரை தெரியுமா என கேட்டு அவரை தாக்கி தப்பினர்.
மேலும் தாங்கள் கையில் கொண்டு வந்த பட்டகாத்தியை சாலையில் தேய்த்துக்கொண்டு சினிமா காட்சிகளில் வருவது போல அட்டூழியம் செய்தனர். வெளியின் நின்ற மக்கள் கும்பலை கண்டு தெறித்து வீட்டுக்குள் தஞ்சமடைந்தனர்.
இது தொடர்பாக சேலையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், இருசக்கர வாகனம் இயக்கும் போது ஏற்பட்ட மோதல் என தெரியவந்துள்ளது.
அந்த கும்பலை சேர்ந்த விக்னேஷ் என்பவர் கடந்த வாரம் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, இதே பகுதியை சேர்ந்த லிங்கா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று மோதியுள்ளார்.
இதனால் இருதரப்பினருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் லிங்காவை தேடி விக்னேஷ் தனது நண்பர்களுடன் முத்தாளம்மன் தெருவில் சுற்றியுள்ளனர். மேலும் லிங்காவின் போட்டோவை சமூக வலைதளம் மூலம் சலவை போட்டு எடுத்து, இவர் தான் லிங்காவா என அப்பகுதி மக்களிடம் கேட்டு தேடியுள்ளனர்.
6 பைக்குகளில் 12 பேர் வந்த அந்த கும்பல், கிருஷ்ணமூர்த்தியிடம் புகைப்படத்தை காட்டி கேட்டதும், அவர் தெரியாது என கூறியதால் ஆத்திரத்தில் அவரை பட்டாகத்தியால் தாக்கியதும், பொதுமக்கல் அலறியடித்து கொண்டு வீட்டுக்ளு தஞ்சமடைந்த காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சென்னையில் தொடர்ந்து பல இடங்களில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் காவல்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தலைநகரம் கொலைநகரமாக மாறும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
This website uses cookies.