கோவை மாவட்ட சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள இடங்களில் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் சோதனை செய்து 50 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரித்ததில் கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் தங்கும் விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் அல்லாத நபர்களைப் பிடித்து விசாரித்ததில் கஞ்சா மற்றும் குற்ற செயலில் ஈடுபட்ட10 க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து இருந்தனர்.
இதன் தொடர்சியாக, தடாகம் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப் படையினர் தடாகம் காவல் துறையினர் அடங்கிய குழுவானது தடாகம் – கணுவாய் பகுதியில் உள்ள கோழிப் பண்ணை சந்திப்பு அருகே சோதனையில் ஈடுபட்ட போது மதுக்கரையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த ராகுல் என்பவர் விற்பனைக்கு வைத்து இருந்த 2.5 கிலோ கிராம் கஞ்சாவினை பறிமுதல் செய்து தடாகம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர்களின் விவரங்களையும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் மற்ற நபர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்து உள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.