மதுரையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து; 70 வயது மூதாட்டி படுகாயம்
Author: kavin kumar27 January 2022, 7:20 pm
மதுரை : மதுரையில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 70 வயது மூதாட்டி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாப்பாளையம் அன்சாரி நகர் 6-வது தெருவை சேர்ந்த கான் மனைவி சாய்னாபேகம் வயது 60 என்பவர் இன்று வீட்டின் சமையலறையில் டீ போட்டுக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சமையல் சிலிண்டர் வெடித்தது. இதில் சாய்னா பேகத்திற்கு படுகாயம் ஏற்பட்டதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சாய்னா பேகத்தின் மருமகன் சாதிக்பாட்சா, எஸ்.எஸ். காலனி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் விசாரணை நடத்தினார். இதில் சாய்னா பேகம் சிலிண்டரில் கியாசை சிறிது நேரம் திறந்து விட்டு உள்ளார்.அதன் பிறகு பற்ற வைக்க முயன்றார். அப்போது தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து எஸ்.எஸ். காலனி போலீசார் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
0
0