இதுக்கு ஒரு முடிவே இல்லையா… சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு

25 February 2021, 12:51 pm
LPG_Gas_Cylinder_UpdaeNews360
Quick Share

சென்னை : சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று ரூ.25 உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் உள்ளிட்ட காரணங்களினால் வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் மாறுபட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே சிலிண்டரின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. கடந்த 4ம் தேதி சமையல் சிலிண்டரின் விலை ரூ.25 -ம், பிப்., 15ம் தேதி 50 ரூபாயும் உயர்த்தப்பட்ட நிலையில், இன்று மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது. இதன்மூலம், சென்னையில் சிலிண்டரின் விலை ரூ.785ல் இருந்து ரூ.810 ஆக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை ஒருபுறம் உயர்ந்து வரும் நிலையில், மறுபுறம் சமையல் சிலிண்டர் விலை அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரூ.100 உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை கவலையடையச் செய்துள்ளது.

Views: - 8

0

0