பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை: பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்..!!

Author: Aarthi Sivakumar
27 September 2021, 10:24 am
Engineering Counciling - Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

பொறியியல் படிப்பில் பி.இ, பி.டெக் பாடப்பிரிவில் சேர்வதற்கு ஆன்லைன் மூலம் ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெற்றப்பட்டது.

1,74,490 மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு விண்ணப்பித்த போதும், 1,45,045 மாணவர்கள் மட்டுமே விண்ணப்ப கட்டணங்களை செலுத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து தகுதியான 1,39,033 மாணவர்களுக்கு தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

பொதுப்பிரிவு மாணவர்கள் 1,36,973 பேருக்கு கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பிற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வுக்கான முதல் சுற்று தரவரிசைப் பட்டியிலில் முதல் 14,788 வரை இடம் பெற்றவர்களுக்கு, இன்று முதல் அக்டோபர் 5ம் தேதி வரையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

அதேபோல் தொழிற்கல்விப் பிரிவில் உள்ள மாணவர்களுக்கான கலந்தாய்வும் இன்று முதல் அக்டோபர் 5ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. கடந்த வாரம் தொடங்கிய கலந்தாய்வில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் மற்றும் சிறப்பு பிரிவினருக்கான, 6,442 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

பொதுப்பிரிவு மாணவர்கள் 1 லட்சத்து 36 ஆயிரத்து 973 பேருக்கு, கலந்தாய்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 17ம் தேதி வரையில் நடைபெற உள்ள இந்த கலந்தாய்வு நான்கு சுற்றுகளாக ஆன்லைன் மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 102

0

0