பென்னிகுயிக்‌ வாழ்விடத்தை இடித்து விட்டு கருணாநிதி நினைவு நூலகமா..? மதுரை ஆட்சியர் அலுவலகம் விளக்கம்

Author: Babu
30 July 2021, 7:59 pm
karunanidhi - pennycuick - updatenews360
Quick Share

மதுரை : முல்லைப்‌ பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல்‌ ஜான்‌ பென்னிகுயிக்‌ வாழ்விடத்தை இடித்து கலைஞர் நினைவு நூலகம் கட்டுப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மதுரை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- மதுரை மாவட்டத்தில்‌ ரூ.70 கோடி மதிப்பீட்டில்‌ கலைஞர்‌ நினைவு நூலகம்‌அமைக்கப்படும்‌ என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ தீரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ கடந்த 03.06.2021 அன்று அறிவித்தார்கள்‌. தென்மாவட்ட மக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌ சர்வதேச தரத்தில்‌ அனைத்து வசதிகளுடன்‌ கூடிய நூலகமாக அமையவுள்ள இந்த புதீய நூலக கட்டிடமானது சுமார்‌ 2 இலட்சம்‌ சதுரதுடி பரப்பளவில்‌ 8 மாடி கட்டிடமாக சுமார்‌ 6 இலட்சம்‌ புத்தகங்கள்‌ வைக்கும்‌ வகையில்‌ கட்டப்பட உள்ளது.

இந்த நூலகத்திற்காக மதுரை மாவட்ட நிர்வாகம்‌ முதற்கட்டமாக மாநகர்‌ பகுதிகளில்‌ 7 இடங்களை தேர்வு செய்து மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌ நாடாளுமன்ற மற்றும்‌ சட்டமன்ற உறுப்பினர்கள்‌ ஆகியோர்‌ ஆப்வு செய்து பார்வையிட்டனர்‌. இறுதியாக இரண்டாம்‌ கட்டமாக மதுரை நத்தம்‌ சாலையில்‌ அமைந்துள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின்‌ பொறியாளர்கள்‌ குடியிருப்பு வளாகம்‌ போதுமான வசதியுடன்‌ இருந்ததால்‌ அந்த இடமானது நூலகம்‌ அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டது.

மேலும்‌, கலைஞர்‌ நினைவு நூலகம்‌ அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அந்த வளாகத்தில்‌ உள்ள குடியிருப்பில்‌ முல்லைப்‌ பெரியாறு அணையை உருவாக்கிய கர்னல்‌ ஜான்‌ பென்னிகுயிக்‌ அவர்கள்‌ வாழ்ந்ததாக கூறப்பட்டு வரும்‌ நிலையில்‌, கர்னல்‌ ஜான்‌ பென்னிகுயிக்‌ அவர்கள்‌ 15.01.1841-ல்‌ பிறந்து 09.03.1911-ல்‌ இயற்கை எய்தியுள்ளார்‌. பொதுப்பணித்துறை ஆவணங்களை பரிசீலனை செய்ததில்‌ இந்த கட்டடமானது 1912-ல்‌ பூமிபூஜை செய்யப்பட்டு 1913-ல்‌ கட்டி முடிக்கப்பட்டதாக பொது கட்டிட பதிவேடு எண்‌.159/1-ல்‌ பதிவு செய்யப்பட்டுள்ளது.

கர்னல்‌ ஜான்‌ பென்னிகுயிக்‌ அவர்கள்‌ மறைந்த காலத்திற்கு பின்‌ கட்டப்பட்ட கட்டிடம்‌ என்பதால்‌ இந்த கட்டிடத்தில்‌ ௮வர்‌ வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள்‌ இல்லை என இந்த செய்தி குறிப்பின்‌ வாயிலாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ .எஸ்‌.அனீஷ்‌ சேகர்‌ தெரிவித்துள்ளார்‌, எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 162

0

0