இந்து மதம், பிரதமர் குறித்து அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

Author: Udayaraman
5 August 2021, 9:03 pm
Quick Share

இந்து கடவுள்கள், பிரதமர் பற்றி அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

குமரி மாவட்டம் அருமனையில் கிறித்துவ மதத்தினரின் உரிமை மறுக்கப்படுவதாக கடந்த 18ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்து கடவுள்களையும் பிரதமர் மோடியையும் அவதூறாக பேசினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்ய வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார்.ஜார்ஜ் பொன்னையாவை தொடர்ந்து அருமனை கிறித்துவ இயக்க செயலாளர் ஸ்டீபனும் கைது செய்யப்பட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து ஜாமீன் கேட்டு இருவரும் குழித்துறை நீதிமன்றத்தில் கடந்த 30ம் தேதி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள் அவர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதனிடையே மற்ற 2 வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த ஸ்டீபன் பத்மநாபபுரம் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த நிலையில் பொன்னையா ஜாமீன் கோரி நாகர்கோவில் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நிதிபதி அருள்முருகன் பொன்னையாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

Views: - 84

0

0