கடல் சீற்றத்தால் கரை ஒதுங்கிய ராட்சத ஆமை!!

By: Udayachandran
13 October 2020, 12:12 pm
Huge Tortoise - Updatenews360
Quick Share

ராமேஸ்வரம் : கடல் சீற்றத்தின் காரணமாக உயிருடன் கரையொதுங்கிய பெருந்தலை ஆமையை வனத்துறையினர் மீட்டு கடலில் விட்டனர்.

ராமேஸ்வரம் அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இன்று வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாக காணப்பட்டதால் மண்டபம் தென் கடல் பகுதியில் சுமார் 70 கிலோ எடை கொண்ட பெருந்தலை ஆமை உயிருடன் கரை ஒதுங்கிய நிலையில் மீண்டும் கடல் சீற்றத்தின் காரணமாக கடலுக்குள் செல்ல முடியாமல் அவதிப்பட்டது.

இந்நிலையில் கடற்கரை பகுதிகளில் ரோந்து சென்ற வனத்துறையினர் கடலுக்குள் செல்ல முடியாமல் கரையில் அவதிப்பட்ட ஆமையை மீட்டு கடலுக்குள் சிறிது தூரம் தூக்கிச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் மண்டபத்தின் சரக வனத்துறை அதிகாரி வெங்கடேஷ் தெரிவிக்கும் போது, கடல் சீற்றம் காரணமாக உயிருடன் கரை ஒதுங்கும் ஆமைகளை மீனவர்கள் பாதுகாப்பாக கடலில் தூக்கி விடவேண்டும் எனவும் இல்லையென்றால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

Views: - 66

0

0