காதல் போர்வையில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் : விசாரணையில் பகீர்.. குமரியில் மீண்டும் உருவான குட்டி “காசி“!!

22 July 2021, 1:11 pm
Kumari Mini Kaasi -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : களியக்காவிளை பகுதியை சேர்ந்த சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டம் ஆர்.சி தெருவை சேர்ந்த அபி. 19 வயதான இவன் களியக்காவிளை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் காதலிப்பது போல நடித்துள்ளான்.

இந்நிலையில் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்ற காமுகன் அபி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த 14 தேதி அந்த சிறுமி வீட்டில் இருந்து மாயமானார்.

இந்த நிலையில் இது சம்மந்தமாக சிறுமியின் தாய் களியக்காவிளை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மார்தாண்டத்தை சேர்ந்த அபி சிறுமியை கடத்தி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளதும், பல பெண்களை காதலித்து காதல் ரோமியோவாக சுற்றியது தெரிந்ததால், அபியை காதலிக்க சிறுமி மறுத்துள்ளார்.

இதனால் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து குழித்துறை அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் அபியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Views: - 218

0

0