காதலி கர்ப்பமானதும் தலைமறைவான மாணவன் : பெற்றோருடன் காதலன் வீட்டில் குடியேறிய கல்லூரி மாணவி!!

Author: Udayachandran RadhaKrishnan
20 December 2021, 6:39 pm
Tiruvannamalai Love Issue -Updatenews360
Quick Share

காதலி கர்ப்பமானது தெரிந்ததும் காதலன் தலைமறைவான நிலையில் குடும்பத்துடன் காதலன் வீட்டில் காதலி குடியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவா பேருந்தில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் ஆரணி டவுன் பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் 21 வயதான மதன்குமாரும் வேறு ஒரு கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

ஒரே அரசு பேருந்தில் பயணிக்கும் போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அப்போது மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி மதன்குமார் பலமுறை பாலியல் உறவு வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அந்த மாணவி கர்ப்பமடைந்தார். அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதன்குமார் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களிடம் நடந்தவை கூறியுள்ளனர்.

மேலும் தனது மகளுடன் மதன்குமாருக்கு திருமணம் செய்து வைக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் மதன்குமாரின் தாயார் சம்மதம் தர மறுத்துவிட்டார். இந்த நிலையில் மதன்குமார் கடந்த சில வாரங்களாகவே தலைமறைவாகியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், கடந்த 15ஆம் தேதி ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து மதன்குமாரின் தாயாரை போலீசார் அழைத்து விசாரித்தனர். பின்னர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆனால் அவரும் தலைமறைவாகிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவி நேற்று மதன்குமார் வீட்டிற்கு தனது பெற்றோரை அழைத்து சென்று, பூட்டிய மதன்குமாரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கேயே தங்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அளித்த தகவல் படி அங்கு வந்த காவல்துறையினர் மாணவியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மதன்குமார் தனது மகளை திருமணம் செய்யும் வரை இங்கிருந்து செல்லமாட்டோம் என கூறி பெற்றோர்கள் காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் மதன்குமாரின் உறவினர்களை அழைத்து போலீசார் நடந்ததை கூறியுள்ளனர். பின்னர் மதன்குமார் மற்றும் அவரது தாயை வரவழைத்து திருமணம் செய்து வைக்கும்படி அவர் உறவினர்களிடம் கூறினர்.

மேலும் எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்னர். ஆனால் மதன்குமார் வரும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என கூறி கல்லூரி மாணவி மற்றும் அவரது பெற்றோர் வீட்டிலேயே தங்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 304

0

0