விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் வேண்டும், திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேட்டினை கண்டித்து மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ள மதுவினால் உயிரிழப்பு ஏற்படுவது மற்றும் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தி விற்பனை செய்யப்படுவதை கண்டித்தும் 15 அடி உயரமுள்ள மதுபாட்டிலில் 10 ரூபாயுடன் ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் ஈடுபட்டனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தின் நடுவே பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம், தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்துள்ளதாகவும்,அமைச்சர் செந்தில் பாலாஜி என்றால் யாருக்கும் தெரியாது பத்து ரூபாய் அமைச்சர் என்றால் எல்லாருக்கும் தெரியும் என்றும் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த அமைச்சரை நீக்காமல் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் திமுக அரசு வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
சென்னையில் ஒரு நாள் மழைக்கே வெள்ளம் சூழ்ந்துள்ளது அதனை பற்றி கவலை படாமல் முதலமைச்சர் ஸ்டாலின் திருவாரூரில் தனது தந்தைக்கு கோட்டத்தை திறந்து வைப்பதாகவும், தமிழக முதலமைச்சர் செயலிழந்து தடுமாறி கொண்டிருக்கும் அவர் மத்திய அரசை கண்டு நடுங்கி கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
பணம் வாங்கி கொண்டு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த செந்தில் பாலாஜி மீது ஸ்டாலின் தலைமையில் உள்ள காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை அமலாக்க துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தமிழக குற்றப்பிரிவு போலீசார் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார்.
தவறு செய்ததால் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அப்போதைய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்காமல் பழி வாங்கும் நடவடிக்கை என தெரிவிப்பதாகவும் எந்நாளும் அவரை காப்பாற்ற முடியாது என சிவி சண்முகம் சாடினார்.
இருதயத்தில் 3 அடைப்புகள் ஏற்பட்டு 8 நாட்கள் ஆகிய பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்படுவது விசாரனையை காலதாமதம் ஏற்படுத்த வேண்டும் ஜாமின் பெற வேண்டும் என்பதால் தான் என்றும் சுகாதார துறை அமைச்சர் ம. சுப்பிரமணியன் அவரும் ஒரு சீட்டிங் பேர் வழி என்று குற்றஞ்சாட்டினார்.
குற்றவாளிகளுக்கு ஆதரவாக சுகாதார் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டியளிக்கிறார் முதலில் அவர் தான் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கலால் வரி செலுத்தாமல் ஆறாயிரம் உரிமம் இல்லாத டாஸ்மாக் கடைகள் நடத்தி ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும் தனக்கு ஆபத்து வரும் என்றால் எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் முதலமைச்சர் ஸ்டாலின் காவு கொடுத்து விடுவார் என கூறினார்.
அண்ணா நகர் ரமேஷ், சாதிக்பாஷாவின் நிலைமை தான் செந்தில்பாலாஜிக்கு ஏற்படும் செந்தில்பாலாஜி பாவம் அவர் எங்களோடு இருந்தவர் என்பதால் இதனை கூறுவதாகவும் இல்லாத நோயிக்கு சிகிச்சை பெற்ற அமைச்சர் செந்தில் பாலாஜி ஓடி ஓடி வாக்கு சேகரிக்க முடியாது என்றும் பின்னர் முதலமைச்சர் குடும்பத்தினர் காபாற்ற மாட்டார்கள் என தெரிவித்தார்.
இரண்டு ஆண்டு திமுக ஆட்சியில் முதலமைச்சர் தனது தந்தைக்கு பேனா அமைப்பது,கோட்டம் அமைப்பதை விட வேற எதுவும் செய்யவில்லை என்றும் கலால் துறையை ஏன் தனது மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏன் முதலமைச்சர் வழங்கவில்லை என கேள்வி எழுப்பினார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.