ஆளுங்கட்சியினர் வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துவது ஏற்புடையது அல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காரணம்பேட்டையில் உள்ள அருள்மிகு கூப்பிடு பிள்ளையார் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் வருகை தந்தார். சுவாமி தரிசனம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது :- வருமான வரித்துறை சோதனை என்பது புதிதல்ல. வழக்கமான ஒன்றுதான். ஆளுங்கட்சியினர் அதிகாரிகள் மீது தாக்குதலில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல.
ஆளுங்கட்சியினரின் பணபலமும், அதிகார பலமும் வெளிவருவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆதாரங்களின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களை தடுக்கவோ அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. உண்மை நிலை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
முதல்வரின் மலேசியா சுற்றுப்பயணம் வெறும் விளம்பரத்திற்காக மட்டும் இருக்கக் கூடாது. தமிழகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும். காரணம்பேட்டை அருகே பத்தாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் உள்ள பேருந்து நிலையத்தை ஜவுளி பூங்காவாக மாற்றி அமைக்க வேண்டும். முறையான சட்ட விதிகளை பின்பற்றி இயங்கும் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கினால் மட்டுமே கட்டுமான தொழில் வளர்ச்சி அடையும், எனவும் தெரிவித்தார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.