மேய்ச்சலுக்கு போன ஆடு : மலைப்பாம்பு விழுங்கிய காட்சி!!

19 September 2020, 6:04 pm
Indian Python Eat Goat- updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : ஓசூர் அருகே மேய்ச்சலுக்கு சென்ற ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள திப்பாளம் கிராமம், மலைப்பகுதி ஒட்டியவாறு இருப்பதால் அடிக்கடி மலைப்பாம்புகள் ஊருக்குள் நுழைவது வழக்கம். இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக ஒசூர் வனத்துறையினர் திப்பாளம் கிராம பகுதிகளில் சுற்றிவந்த மலைப்பாம்புகளை பிடித்து சென்றிருந்தனர்.

இந்த நிலையில் இன்று சென்னப்பா (வயது 48) என்கிற விவசாயி தனக்கு சொந்தமான 10 வெள்ளாடுகளை மேய்ச்சலுக்காக வனப்பகுதி ஒட்டிய விளைநிலங்களில் ஓட்டி சென்றிருந்த நிலையில், ஆடு அலறும் சத்தத்தை கேட்ட விவசாயி சென்னப்பா அருகில் சென்று பார்த்ததில் மலைப்பாம்பு ஒன்று ஆட்டினை விழுங்கி வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அப்பகுதியினருக்கு தகவல் அளித்துள்ளார்.

பொதுமக்கள் வருவதற்குள்ளாக ஆட்டை மலைப்பாம்பு முழுமையாக விழுங்கிய இருந்த நிலையில் மலைப்பாம்பினை பத்திரமாக மீட்ட திப்பாளம் கிராமத்தினர் ஒசூர் வனத்துறையினர் இடம் ஒப்படைத்தனர். ஆட்டினை விழுங்கிய மலைப்பாம்பினை ஒசூர் வனத்துறையினர் பாதுகாப்பாக சானமாவு வனப்பகுதியில் விடுவித்தனர்.

Views: - 13

0

0