எதே…துணி வாங்குனா ஆடு இலவசமா…இந்தா கிளம்பிட்டோம்: புதுசா யோசிச்ச துணிக்கடை ஓனர்..!!

Author: Aarthi Sivakumar
22 October 2021, 4:37 pm
Quick Share

திருவாரூர்: தீபாவளிக்கு துணி வாங்கினால் ஆடு இலவசம் என்ற விளம்பரம் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தீபாவளி வந்தாலே போதும் துணிக்கடைகள் மட்டுமின்றி அனைத்து பொருட்களுக்கும் தள்ளுபடியை அறிவித்து வியாபாரிகள் லாபத்தை அள்ளுவதிலேயே முனைப்பு காட்டுவது வழக்கம். அதிலும், இலவசம் அறிவித்து வாடிக்கையாளர்களை கவர புது புது யுக்திகளை வியாபாரிகள் கையிலெடுத்துள்ளனர்.

துணிக்கடைகளில், ஒன்று வாங்கினால் 1, 2, 3, 4 என இலவசங்களை வாரி வழங்குவர். மேலும், துணி வாங்கினால் பட்டாசு இலவசம், இனிப்பு இலசம் என ஆஃபர்களை அள்ளி வீசி வருகின்றனர்.

இந்த வரிசையில், திருவாரூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் தீபாவளிக்கு துணி எடுத்தால் ஆடு இலவசம் என அதிரடியாக அறிவித்துள்ளனர். அவர்கள், அறிவிப்பை பார்த்து வாடிக்கையாளர்கள் வந்தார்களோ, இல்லையோ விளம்பரம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும், இந்த விளம்பரத்தை வைத்து நெட்டிசன்கள் செய்த குறும்பான மீம்ஸ்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Views: - 430

0

0