மருந்தக உரிமையாளர் வீட்டில் 28 சவரன் தங்கம், 50 கிலோ வெள்ளி திருட்டு : பணிப்பெண் கைது!!
1 October 2020, 1:22 pmசென்னை : கொளத்தூரில் மருந்தக உரிமையாளரின் வீட்டில் 28 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 கிலோ வெள்ளி பொருட்களை திருடிய பணிப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொளத்தூர் கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் ராஜமுகுந்தன், புவனேஸ்வரி தம்பதியினர். இவர்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் மருந்தகம் வைத்து நடத்தி வருகின்றனர்.
நேற்று இவர்களது வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 28 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து ராஜமங்கலம் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் , கடப்பா ரோடு பகுதியை சேர்ந்த வேண்டா (வயது 40) என்ற பெண் கடந்த ஒன்றரை மாதம் முன்பு வீட்டு வேலைக்காக பணிக்கு சேர்ந்துள்ளார்.
இதையடுத்து அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில் திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து இப்பெண் அந்த பெண்ணை கைது செய்த ராஜமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0
0