மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.256 உயர்வு…கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!!

6 March 2021, 1:20 pm
gold - Updatenews360
Quick Share

சென்னை: கடந்த சில நாட்களாக சரிவை நோக்கி சென்ற தங்கத்தின் விலை இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளதால் வாடிக்கையாளர்கள் சற்று கலக்கமடைந்துள்ளனர்.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதால், அதன் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. இதற்கிடையே 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது.

இதனால் கடந்த சில வாரங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4216க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.33728க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.36856க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை 1 கிராம் வெள்ளி 20 காசுகள் உயர்ந்து ரூ.70.10க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.70,100 ஆக உள்ளது.

Views: - 17

0

0