அதிகரிக்கும் தங்கத்தின் விலை: 2 நாளில் ரூ.840 உயர்வு….கலக்கத்தில் இல்லத்தரசிகள்..!!

2 April 2021, 3:38 pm
Gold Rate - Updatenews360
Quick Share

சென்னை: தங்கத்தின் விலை தொடந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. மார்ச் 1ம் தேதி ஒரு சவரன் 34,736க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வந்தது. கடந்த 30ம் தேதி சவரனுக்கு 248 குறைந்து, ஒரு சவரன் 33,616க்கு விற்கப்பட்டது.

2வது நாளாக நேற்று முன்தினம் தங்கம் விலை மேலும் குறைந்தது. கிராமுக்கு 40 குறைந்து ஒரு கிராம் 4,162க்கும், சவரனுக்கு 320 குறைந்து ஒரு சவரன் 33,296க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை குறைந்து வந்தது நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்தது. வாடிக்கையாளர்களின் இந்த மகிழ்ச்சி 2 நாட்களுக்கு கூட நீடிக்கவில்லை. நேற்று காலையில் தங்கம் விலை அதிரடியாக உயர்வை சந்தித்தது. கிராமுக்கு 64 அதிகரித்து ஒரு கிராம் 4,226க்கும், சவரனுக்கு 512 அதிகரித்து ஒரு சவரன் 33,808க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது.

நேற்று முன்தினம் கிராமுக்கு 76 விலை அதிகரித்து ஒரு கிராம் 4,238க்கும், சவரனுக்கு 608 அதிகரித்து ஒரு சவரன் 33,904க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலைய உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 29 அதிகரித்து ஒரு கிராம் 4,267க்கும், சவரனுக்கு 232 அதிகரித்து ஒரு சவரன் 34,136க்கும் விற்கப்படுகிறது. இதன்மூலம் தங்கம் சவரன் மீண்டும் 34,000ஐ தாண்டியுள்ளது. தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 0

0

0