மீண்டும் ‘ஷாக்’ கொடுக்கும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.256 உயர்வு..!!

Author: Aarthi Sivakumar
11 March 2021, 12:35 pm
Gold Rate - Updatenews360
Quick Share

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை எட்டி வரலாறு காணாத விலை உயர்வை அடைந்தது. ஏற்கனவே, ஊரடங்கால் தவித்துக் கொண்டிருந்த நடுத்தர மக்களுக்கு தங்கம் விலை உயர்வு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொழில்துறையில் நிலவிய தேக்கம், முதலீட்டாளர்களை தங்கத்தின் மீது திசை திருப்பி விட்டது. இது தங்கம் விலை அதிகரிப்பில் எதிரொலித்தது.இதைத் தொடர்ந்து, முதலீடுகள் குறைந்ததால் தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது. அவ்வப்போது விலை உயர்ந்து ஷாக் கொடுத்தாலும், பெரிதாக மாற்றம் இருக்கவில்லை.
இந்நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,239க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.33,912க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,700க்கும் விற்பனையாகிறது.

Views: - 131

0

0