ஆபரணத் தங்கம் மீண்டும் விலை உயர்வு: ஒரு சவரன் ரூ.35 ஆயிரத்தை கடந்தது..!!

Author: Aarthi Sivakumar
1 October 2021, 3:39 pm
Gold_Jewellery_Updatenews360
Quick Share

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ஒரேநாளில் சவரனுக்கு ரூ.448 உயர்ந்து ரூ.35, 136க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியாலும் தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா எதிரொலியாக வங்கி வட்டி விகிதங்கள் பெருமளவு குறைந்துள்ளன. இதனால் அந்நாடுகளின் முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் தங்கத்தை வாங்கி வருகின்றன.

gold-price

பங்குச்சந்தைகள் சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இந்தநிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.4392க்கு விற்பனையாகிறது.


சவரனுக்கு ரூ.448 உயர்ந்து ரூ.35136க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.38048க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 70 பைசா உயர்ந்து ரூ 63.70க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 63,700 ஆக உள்ளது.

Views: - 1061

0

0