‘மஜாப்பா, மஜாப்பா…’ மீண்டும் ரூ.38,000க்கு கீழ் சரிந்தது தங்கம் விலை..!!

19 November 2020, 11:07 am
Gold Rate - Updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.38 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருப்பது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தங்கம் விலை ஏறுமாகவே இருந்து வந்தது. இதன் காரணமாகவே, கடந்த வாரம் சவரன் தங்கம் ரூ. 39,000த்தை தாண்டியது. பின்னர், யாரும் எதிர்பார்க்காத விதமாக, கடந்த வாரம் தொடர்ந்து இறங்கு முகமாகவே இருந்து வந்தது. இதனால், தங்கம் விலை மீண்டும் ரூ.39,000த்திற்கு கீழாக சென்றது.

இந்த மகிழ்ச்சியில் தீபாவளியை கொண்டாடிய மக்களுக்கு மேலும் ஒரு கூடுதல் சந்தோஷத்தை தங்கம் விலை உருவாக்கிக் கொடுத்துள்ளது. அதாவது, கடந்த 3 நாட்களாக தங்கம் விலை இறங்கு முகமாகவே இருந்து வருவதால், சவரன் தங்கம் ரூ. 38,000த்திற்கு கீழ் குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.33 குறைந்து ரூ.4,747 -க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.264 சரிந்து ரூ.37,976க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து 66,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Leave a Reply