மீண்டும் ரூ.38 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தங்கம் விலை : வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!!

23 November 2020, 5:13 pm
gold - updatenews360
Quick Share

கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்றும் சற்று குறைந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் கடந்த வாரங்களில் ஏறுமுகமாகவே தங்கம் விலை இருந்து வந்தது. இதனால், ரூ.38 ஆயிரத்தை கடந்தும், குறைந்தும் வருகிறது. இந்த நிலையில், வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இதனால், மீண்டும் தங்கம் விலை ரூ.38 ஆயிரத்திற்கு கீழாக சென்றுள்ளது.

கிராமுக்கு ரூ.12 குறைந்து ரூ.4,748-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.96 சரிந்து ரூ.37,984க்கு விற்பனையாகிறது. அதேபோல, சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.66.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 0

0

0