மாலையிலும் ஏறுமுகமாகவே இருக்கும் தங்கம் விலை…! ரூ.192 உயர்ந்து வர்த்தகம்!!

14 August 2020, 4:19 pm
gold - updatenews360
Quick Share

சென்னை : கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று மாலையிலும் உயர்ந்தே காணப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக, அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால், திருமணம் உள்ளிட்ட எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளும் நடத்துவது குறைந்துவிட்டது. அப்படி மீறி நடந்தாலும் எளிய முறையில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இதனால், தங்கம் வாங்குவது குறைந்து, அதன் இறக்குமதியும் குறைந்துவிட்டது.

இருப்பினும், வர்த்தக வரலாற்றில் இல்லாத அளவில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றது. இது பொதுமக்களின் தங்கம் வாங்கும் திறனை முற்றிலும் அழித்து விட்டதாக உள்ளது. கடந்த இரு வாரங்களாக ஏறு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, கடந்த 5 நாட்களாக இறங்கி வந்தது.

இன்று காலையில் சவரனுக்கு ரூ.280 அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ. 35அதிகரித்து ரூ. 5,111ஆக விற்பனையானது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.280 சரிந்து ரூ. 40,888க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், மாலையிலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படுகிறது. மாலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ. 24 அதிகரித்து ரூ. 5,100ஆக விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.192 உயர்ந்து ரூ. 40,888க்கும் விற்பனையாகி வருகிறது.

கடந்த சில நாட்களை போல, எதிர்வரும் நாட்களில் தங்கத்தின் விலை இறங்கு முகமாகவே இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.